1) ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிடுக.

தொல்காப்பியமும் நன்னூலும் ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தெரிவித்திருக்கும் கருத்துகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுகின்றன.

ஒற்றுமைகள்

(1) தொல்காப்பியமும், நன்னூலும் ஓர்எழுத்தே ஒருமொழியாக வரும் என்பதைக் குறிப்பிடுகின்றன.
(2)

பெரும்பாலும் நெடில்எழுத்துகளே ஓர்எழுத்து ஒருமொழிகளாக வரும் என்பதை இருநூல்களும் குறிப்பிடுகின்றன.

வேற்றுமைகள்

(1)

தொல்காப்பியம் ஓர்எழுத்து ஒருமொழிகளாக உயிர்எழுத்துகளை மட்டுமே தெரிவிக்கிறது. நன்னூல் உயிர்எழுத்துகளோடு உயிர்மெய் எழுத்துகளிலும் ஓர்எழுத்து ஒருமொழிகள் வரும் என்று கூறுகின்றது.

(2)

தொல்காப்பியம் உயிர் நெடில்கள் ஏழையும் ஓர்எழுத்து ஒருமொழி என்று கூற, நன்னூல் ‘ஒள’வை நீக்கிவிட்டு உயிர்நெடில்கள் ஆறு எழுத்துகள் மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழிகள் என்று தெரிவிக்கின்றது.

(3)

தொல்காப்பியம் குற்றெழுத்துகள் ஓர்எழுத்து ஒருமொழியாக வருவது இல்லை என்று கூற. நன்னூல் உயிர்மெய் எழுத்துகளில் நொ, து ஆகிய இரு குற்றெழுத்துகள் ஓர்எழுத்து ஒருமொழிகளாக வரும் என்று விளக்குகின்றது.

முன்