2)

தமிழ் எழுத்துகள் சொல்லாவதற்குக் கூறப்படும் உவமையை விளக்குக.

தனித்தனித் தமிழ் எழுத்துகள் இணைந்து நின்று சொல்லாக உருவாவதற்குத் தனித்தனி மலர்களால் தொடுக்கப்படும் மாலை உவமையாகக் கூறப்படுகின்றது.

மலர் தனியாக இருக்கும்போதும், பல மலர்கள் இணைந்து மாலையில் இடம்பெறும்போதும் அவற்றின் அடையாளத்தை இழப்பதில்லை. மாலையில் இருக்கும் மலர்கள் தனித்தனியே வெளிப்படக் கூடியவை. இதைப் போலவே தமிழிலுள்ள எழுத்துகள் தனித்தனியே இருக்கும் போதும், இணைந்து நின்று ஒரு சொல்லாக அமையும்போதும் ஒவ்வோர் எழுத்தின் ஒலியிலும் மாற்றம் தோன்றுவதில்லை. சொல்லில் அமையும் எழுத்துகள் ஒவ்வொன்றும் அதன் ஒலியின் தனித்தன்மையை இழந்து விடுவது இல்லை என்பதையே இந்த உவமை விளக்குகின்றது.

முன்