பாடம் - 4 |
C03114 பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள் |
ஒரு பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி, மாற்றங்கள், பெருமைகள், சிறுமைகள் என அனைத்தையும் கால வரிசைப்படுத்தித் தருவது பண்பாட்டு வரலாறு ஆகும். பழம் பெருமை வாய்ந்த ஒரு பண்பாட்டின் வரலாற்றை எழுத உதவுபவை அதன் மொழி, இலக்கியம், கலை, போன்றவை கொடுக்கும் குறிப்புகளே. அகழ்வாராய்ச்சிகள், பண்டைய கல்வெட்டுகள், நாணயங்கள் போன்றவற்றின் வாயிலாகக் கிடைக்கும் செய்திகளும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க உதவும். தமிழர் பண்பாட்டு வரலாற்றை உருக்கொடுக்க உதவும் சான்றுகளைப் பற்றி இப்பாடம் விரித்துரைக்க முயல்கிறது. |
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|