3.6 தொகுப்புரை | |||||||||||||||||||||||
சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்குக் கலையும் இலக்கியமும் எடுத்துக்காட்டுகள், சாந்திக்கூத்து, விநோதக்கூத்து போன்ற பல கூத்துகள் ஆடப்பட்டன. தோல்கருவி, துளைக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகள் பற்றி இசைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. கலைவல்லுநர்கள், தளிச்சேரிப்பெண்கள் ஆகியோர் சிறப்பும், பெருமையும் பெற்றிருந்தனர். தேவரடியார்கள் பொதுப்பணி
செய்ததும்
கோயிலுக்கு
நிலம் அளித்த செய்தியும் தெரிய வருகின்றன. தமிழ்மொழி மீது பற்றுக்
கொண்டு தங்கள் பெயர்களில் தமிழைச் சேர்த்துக் கொண்டதும்
புலப்படுகிறது. கல்வெட்டுகளில் சங்ககால மன்னர் பெயர்கள்
மட்டுமன்றி, புலவர், உரையாசிரியர், நூலாசிரியர் ஆகியோரின்
பெயர்களும் காணப்படுகின்றன. இவ்வாறு, கலையும் இலக்கியமும்
பற்றிக் கல்வெட்டு வாயிலாக அறியும் உண்மைகள் பல. |
|||||||||||||||||||||||
|