6.5 தொகுப்புரை

உலகில் மிக இன்றியமையாத தொழிலாக விளங்கிய வேளாண்மை பற்றியும் அதன் அடிப்படையில் எழுந்த வணிகம் பற்றியும் இதுவரை படித்தீர்கள், வேளாண்மைத் தொழில் சிறந்து விளங்கத் தேவையான ஆறுகள், ஏரிகள், கிணறுகள் போன்ற நீர்நிலைகளை முறையே சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஏற்படுத்தினர். ஏரிகளைத் தூர்வாரிப் பாதுகாத்தனர்.

கல்வெட்டுகளில் காணப்படும் பல்வேறு வணிகக்குழுக்கள், வணிக ஊர்கள், வணிகத் தளங்கள், வணிகப் பெருவழிகள், சந்தைப் பொருள்கள், வணிகர் சமயத் தொடர்பு முதலியவை பற்றிய செய்திகள் பண்டைத் தமிழர்கள் வாணிகத்தில் சிறந்திருந்ததை வெளிப்படுத்துகிறது.
 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

‘அஞ்சு வண்ணம்’ என்றால் என்ன?

(விடை)
2) குடத்தில் கொண்டு வரப்பட்ட வணிகப் பொருட்கள் எவை? (விடை)
3) வணிகர் குழுக் கூட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது? (விடை)
4) வணிகப் பொருள்களை எவற்றின் மீது ஏற்றிச் சென்றனர்? (விடை)
5)

ஏற்றுமதிப் பொருள்களும் இறக்குமதிப் பொருள்களும் எவ்வாறு அழைக்கப்பட்டன?

(விடை)