தன் மதிப்பீடு : விடைகள் - II

2. பரிசில் வாழ்க்கையின் தன்மைகள் யாவை?

பரிசில் வாழ்க்கை 1. வளமிக்க கொடையாளிகளைத் தேடிச் செல்வதாக அமைவது. 2. தாம் செல்ல வேண்டிய இடம் மிகத் தொலைவானது என்றும் செல்ல அரிய வழிகளை உடையது எனவும் நினையாதது. 3. தம் தெளிந்த நாவால் தாம் அறிந்தவாறு பிறரைப் பாடுவது. 4. பாடிப் பெற்ற பொருளைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளாது பிறர்க்கும் வழங்குவது. 5. தம் சிறப்பறிந்து பிறர் பரிசில் வழங்க வேண்டும் என நினைவது என்ற பண்புகளை உடையது.

முன்