தன் மதிப்பீடு : விடைகள் - II

3. கணைக்கால் இரும்பொறையின் பாட்டு எச்சூழலில் பாடப் பெற்றது?

இப்பாட்டைப் பாடியவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை. இவ்வேந்தன் திருப்போர்ப் புறம் என்ற இடத்தில் சோழன் செங்கணானோடு போரிட்டபோது, சோழனால் சிறைப்பிடிக்கப்பட்டு, சங்கிலியாற் பிணைக்கப் பட்டுச் சிறையிற் கிடந்தான். அப்போது அவன் சிறைக் காவலரிடம் தண்ணீர் வேண்டினான். அவர்கள் காலந் தாழ்த்து, அவனைச் சிறிதும் மதியாது தண்ணீர் தந்தனர். அந்நீரைப் பருகாமல், அவன் உயிர் விடுங்கால் இப்பாட்டை எழுதி வைத்துச் சென்றான்.

முன்