தன்
மதிப்பீடு : விடைகள் - I
2. இவ்வே பீலி அணிந்து எனத் தொடங்கும் செய்யுள் கருத்தைக் கூறுக. “இப்போர்க் கருவிகள் மயில் தோகை மாலை சூட்டப்பட்டுள்ளன. இவற்றின் உடற்பகுதிகளாகிய திரண்ட வலிய காம்புகள் அழகுறச் செய்யப்பட்டு உள்ளன. நெய் பூசப்பட்டுக் காவல் மிக்க அகன்ற அரண்மனைக் கண் உள்ளன. அப்போர்க் கருவிகள் (அதியமானுடையவை) பகைவரைக் குத்துதலால் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது கொட்டிலில் கிடக்கின்றன. செல்வம் உண்டானபோது பிறர்க்கெல்லாம் உணவு தந்து, செல்வம் இல்லாதபோது உள்ளதனைப் பலரோடு சேர்ந்து உண்ணும் வறுமைப் பட்டவர்களின் சுற்றத்திற்குத் தலைவனாகிய எம் வேந்தனின் கூரிய நுனியையுடைய வேலும் கொல்லன் உலையை விரும்பிற்று” என்பது இப்பாட்டின் கருத்தாகும். |
|