தன் மதிப்பீடு : விடைகள் - I

4. குமணனின் சிறப்பை எடுத்துரைக்க.

குமணன் முதிர மலைக்குத் தலைவன். தன்னை நாடி வந்தவர் அனைவர்க்கும் வரையாமல் பெரும் பரிசில்கள் தந்தவன். பெருஞ்சித்திரனார் இம்மன்னனைக் குறித்து மற்றொரு பாட்டில் பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகிய ஏழு வள்ளல்களும் இறந்த பிறகு இரவலர் துன்பம் தீர்ப்பவன் எனப் போற்றியுள்ளார். குமணனின் நாடு அவன் தம்பி இளங்குமணனால் கொள்ளப்பட்டது. குமணன் காட்டில் சென்று தங்கினான். அந்நிலையிலும் இளங்குமணன் பகை தீரவில்லை. குமணனின் தலையைக் கொண்டு வருபவர்க்குப் பரிசில் தருவதாக அறிவித்தான். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் காட்டிற்குச் சென்று குமணனைப் பாடினார். பரிசில் ஒன்றும் கொடுக்க இயலாத நிலையில் அவன் புலவரிடம் வாளைத் தந்து என் தலையை வெட்டிச் சென்று இளங்குமணனிடம் பரிசில் பெறுக என்றான். புலவர் வாளைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் காட்டிக் குமண வள்ளலின் பெருந்தன்மையைப் புலப்படுத்தினார்.(புறநானூறு, 165)

முன்