பாடம் - 3
D01143 புறநானூறு - 3
|
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
|
புறநானூற்றில் இரண்டு பாடங்கள் முன்பு வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக அமைந்த மூன்றாவது பாடம் இது. எட்டுப் பாடல்கள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன. 1) அரசர்க்குரிய நீதி 2) குழந்தைப் பேற்றின் பெருமை 3) பிறர்க்குப் பொருளைக் கொடுத்து வாழ்தலில் உள்ள சிறப்பு 4) அமைதியான வாழ்க்கைக்கு வேண்டுவன 5) அவரவர் வினைகளே அவரவர் நிலைக்குக் காரணமாதல் 6) புகழ்பெற வாழ்ந்து இறத்தலே சிறப்புடையது. 7) போர்க்களத்தில் மார்பிற் புண்பட்டு இறத்தல் புகழுடையது 8) ஒரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனை வீரனாக உருவாக்கும் பொறுப்புப் பலர்க்கும் உள்ளது என்ற எட்டுச் செய்திகளை இப்பாடம் விவரிக்கின்றது. இப்பாடத்தில் இடம் பெற்றுள்ள பாடல் எண்கள் 184, 188, 189, 191, 192, 214, 278, 312 ஆகியன. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்னபயன் பெறலாம்? |
|