4.9 தொகுப்புரை

வாழ்வு நிலையற்றது என்று பழந்தமிழர் கருதினர். எல்லாம் இறந்தாலும் இந்தச் சுடுகாட்டுக்கு இறப்பில்லை என்று பாடினார்கள் அவர்கள். உடம்பு நிலையாமையை மட்டுமல்லாமல், செல்வம், இளமை ஆகியனவும் நில்லாமல் மறையக் கூடியன என்று கூறி, வாழும் போது நல்லன செய்யத் தூண்டினர். இவ்வெட்டுப் பாடல்களும், மனிதர்களுக்கு வாழ்க்கையின் உண்மை இயல்பை எடுத்துரைத்தன.

மேலும் சிறப்புச் செய்திகளாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற இருபெரு வேந்தர்களைக் குறித்த பாடல்களை இப்பகுதியில் படிக்கும் நீங்கள், அதியமான், ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் போன்ற குறுநில மன்னர்களைப் பற்றிய பாடல்களையும் படிக்கின்றீர்கள்.

இப்பாடல்களிலிருந்து அறியப்படுவன யாவை?

1. புகழ் பலராலும் விரும்பிப் போற்றப்படுவது.
2. இளமையும் உடம்பும் நிலையாதவை.
3. ஒன்றி உடன் வாழ்ந்த அன்பு மறக்க முடியாதது என்பவையாகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. முல்லைப் பூவை நோக்கிக் குடவாயிற் கீரத்தனார் யாது கூறினார்?
2. தொடித்தலை விழுத்தண்டினார் கழிந்துபோன இளமை குறித்துக் கூறுவன யாவை?
3. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் துயரம் எத்தகையது என்பதை விளக்குக.
4. கையறு நிலை என்பது யாது?