தன் மதிப்பீடு : விடைகள் - II

1. முல்லைப் பூவை நோக்கிக் குடவாயிற் கீரத்தனார் யாது கூறினார்?

“முல்லைப் பூவே! உன்னை இன்று இளையவர்கள் சூட மாட்டார்கள்; வளையணிந்த மகளிரும் இன்று உன்னைப் பறிக்கமாட்டார்கள்; யாழின் கோட்டினாலே பாணன் கொடியை வளைத்து உன்னைப் பறித்துச் சூடமாட்டான்; பாடினியும் உன்னை அணியமாட்டாள். தனது ஆண்மை வெளிப்படப் பகைவரை எதிர்நின்று வென்ற வன்மை மிக்க வேலைக் கொண்ட சாத்தன் இறந்த பிறகு ஒல்லையூர் நாட்டில் முல்லை மலரே! நீ மட்டும் எதற்காகப் பூத்தாய்?”.

முன்