தன் மதிப்பீடு : விடைகள் - I

2. புலவர் ஐயூர் முடவனார்கலம் செய்யும் குயவனை நோக்கிக் கூறியது யாது?

“சமைக்கின்ற கலங்களைச் செய்யும் குயவனே! சமைக்கின்ற கலங்களைச் செய்யும் குயவனே! உன்னுடைய சூளை இப்பழைய ஊரில் அகன்ற பெரிய இடத்தில் உள்ளது. அந்தச் சூளையிலிருந்து புகை எழுந்து விரிந்து பரந்த ஆகாயத்தில் சென்று நிற்கும். அப்போது இருள் ஓரிடத்தில் செறிந்து நிற்பது போல் தோன்றும். இத்தகு சூளையில் கலங்களைச் செய்யும் குயவனே! நீ மிகவும் இரங்கத் தக்கவன் ஆனாய்! நீ மிகப் பெரியவருத்தம் அடைவாய்! கிள்ளிவளவனின் சேனை நிலம் முழுதும் பரந்து நின்றது. வானத்தின் கண் விளங்கும் சூரியன் அறிவுடையோரால் புகழப்பெற்ற பொய்யற்ற நல்ல புகழையும் சுடரினையும் உடையவன். அவனைப் போன்றே கிள்ளிவளவனும் புகழும் பெருமையும் மிக்கவன். சூரியன் அகன்ற ஆகாயத்தில் தொலைவில் இருந்தாலும் அதன் சுடர் பரந்து செல்வது போலச் செம்பியர்(சோழர்) குடியில் தோன்றிய சோழனின் புகழும் திசைகளில் எல்லாம் சென்று விளங்கிற்று. அவ்வளவன் கொடிகள் அசைகின்ற யானையினை உடைய பெருமை உடையவன். அவன் தேவர்கள் வாழும் விண்ணுலகத்தை அடைந்தான். அதனால் இவ்வளவு பெரும் புகழ்க்குரிய ஒருவனைக் கவித்து மூடும்பெரிய தாழியை நீ செய்ய விரும்பினால் எப்படிச் செய்வாய்? இந்தப் பெரிய நிலத்தையே சக்கரமாகவும், இமயமலையையே மண்ணாகவும் கொண்டு தாழி செய்ய உன்னால் முடியாதே! ஆகவே நீ இரங்கத் தக்கவன்தான்”

முன்