தன் மதிப்பீடு : விடைகள் - I

3. மாந்தரஞ்சேரலின் இறப்புக்குறித்துக் கூடலூர்கிழார் கூறுவன யாவை?

"நட்சத்திரம் ஒன்று காற்றால் அலைந்து நல்ல திசையாகிய கிழக்கும் வடக்கும் போகாமல் தீய திசையாகிய தெற்கும் மேற்குமாகிய ஒரு திசையில் விழுந்தது. அதனைப் பார்த்து யாமும், பிறரும் பல்வேறு இரவலர்களும் ‘பறை போலும் இசையோடு ஒலிக்கும் அருவிகளை உடைய மலைநாட்டுக்கு வேந்தனாகியவன் நோயில்லாமல் இருப்பின் நல்லது’ என வருந்திய உள்ளத்தோடு அஞ்சிக் கூறினோம். அவ்வாறு அஞ்சிய, குறித்த ஏழாம் நாள் வந்தது. இன்று வலிமை மிக்க யானை தும்பிக்கையை நிலத்திலே கிடத்தித் துயில் கொண்டது. திண்மையான வாரால் கட்டப்பட்ட முரசம் கண்கிழிந்து உருண்டது. உலகைக் காக்கும் அரசனின் வெண்கொற்றக் குடை கால் ஒடிந்து விழுந்தது. காற்றைப் போல விரைந்து செல்லும் குதிரைகள் இயக்கமின்றிக் கிடந்தன. இவ்வாறாக அரசன் தேவர் உலகை அடைந்தான். பகைவரைச் சிறைப்படுத்தும் வலிமையையும், விரும்பி வந்தவர்க்கு அளந்து கொடுத்தலை அறியாத கொடையையும் உடைய நீலமலை போலும் வேந்தன் ஒளிபொருந்திய வளைகளை உடைய வான மகளிர்க்குத் துணையாகி, இந்நிலவுலகில் தனக்குத் துணையான மகளிரை மறந்தான் போலும்”

முன்