தன் மதிப்பீடு : விடைகள்
- I
4. பாட்டு, உரைசால் வேள்வி எனப் பெயர் பெறுவதற்குரிய காரணத்தை விளக்குக. உரைசால் வேள்வி என்பது இப்பாட்டின் பெயர். உயர்ந்த புகழமைந்த வேள்வி என்பது இதன் பொருள். அந்தணர் அத்தகைய வேள்விகளைச் செய்தனர் என இப்பாட்டுக் கூறுகின்றது. மேலும், 'இரவலர் பசிதீர்க்கும் சேரனின் ஈகையாகிய வேள்வி இனிய தமிழால் பாடப்பெறுவதற்கு உரியது' என்னும் குறிப்பைத் தருவதால் இத்தொடர் பாட்டின் பெயராக அமைந்தது.
|