தன் மதிப்பீடு : விடைகள் - I

5. நாள் மகிழ் இருக்கையில் சேரன்தேவி எவ்வாறு குறிக்கப் பெறுகின்றாள்?

அணிகலன்களை அணிந்து அழகு பெற்ற, ஓவியத்தில் எழுதப்பட்டது போல் தோன்றும் மார்பினையும், அழகுமிக்க வரிகளை உடைய இடைப்பகுதியையும், அகன்ற கண்களையும், மூங்கிலைப் போலத் திரண்ட தோள்களையும், கடவுளரையும் ஏவல் கொள்ளும் கற்பினையும், தொலைவிலும் சென்று மணம் கமழும் நெற்றியினையும், செவ்விய அணிகளையுமுடையவள்.

முன்