|
|
அருந்தமிழ்
அகப்பொருளானது கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என ஏழு வகைப்படும்.
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன ஐந்திணைகள் ஆகும்.
இவையே இருபாலரும் ஒருமித்து அன்பு காட்டும் பகுதி ஆதலின் அன்பின்
ஐந்திணை எனப்பட்டது. கைக்கிளை - ஒரு தலைக் காமம் என்றும், பெருந்திணை
- பொருந்தாக் காமம் என்றும் குறிப்பிடப் பெறுகின்றன.
|