1.7 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் கீழ்க்காணும் செய்திகள் அறியப்படுகின்றன.

  1. ஐவகை இலக்கணமும் அவற்றுள் அகப்பொருள் பெறும் சிறப்பும் கூறப்பட்டன.

  2. ‘அகம்’ பற்றிய இலக்கணம் தமிழுக்கே உரியது என்ற உயரிய உண்மை புலப்படுத்தப்பட்டது.

  3. தமிழ் இலக்கியங்களில் அகம் சார்ந்த பாடல்களின் பெருக்கமும் அதற்கான காரணமும் தெரிய முடிந்தது.

  4. தமிழில் எழுதப்பட்டுள்ள அகப்பொருள் இலக்கண நூல்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றன.

  5. நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் நூல் பற்றிய பொது அறிமுகம் கூறப்பட்டது.

  6. அகத்திணை ஒழுக்கம் பற்றிய பொதுவான சில செய்திகள் தெரிவிக்கப்பட்டன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
சங்க இலக்கிய அகப்பொருள் நூல்கள் எவை?

விடை

2.
அகப்பாடல்கள் அதிகம் தோன்றியதற்கான காரணம் யாது?

விடை

3.
அகப்பொருளுக்கென்றே தோன்றிய இலக்கண நூல்கள் எவை?

விடை

4.
நாற்கவிராச நம்பி - ஆசிரியர் குறிப்பு வரைக.

விடை

5.
அகப்பொருளின் வகை பற்றி எழுதுக.

விடை