இயற்கைப் புணர்ச்சி என்றால் என்ன? அதன் இருநிலைகளைக் கூறுக.
முதன் முதலாகத் தலைவனும் தலைவியும் தாமே
கண்டு கூடுவது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். தெய்வம்
கூட்டுவிக்கத் தன்மனம் வேறாய் (திரிந்து) நின்ற
தலைவன்,தலைவியைக் கூடுவான். இதனை, (1) தெய்வத்தால்
எய்துவது (2) தலைவியால் எய்துவது என இருநிலைகளாகக்
காணலாம்.