களவியல் பற்றிய இரண்டாம் பகுப்பான இப்பாடத்
தொகுப்பின் மூலம் பின்வரும் செய்திகளை அறிந்து கொண்டோம்.
- தலைவன் விருப்பத்தைப் பாங்கி
உடன்படுதல்; அதன்
மூன்று நிலைகள்.
- பாங்கியின் மூலம் நிகழும் தலைவன்
தலைவியரின்
கூட்டத்தின் வகைப்பாடுகள்.
- மடலேறுதல் பற்றிய விளக்கம்.
- தலைவனும் தலைவியும் பகலிலும்
இரவிலும் சந்தித்துக்
கொள்ளும் குறியிடம் - குறி
இடையீடு பற்றிய
விளக்கங்கள்.
- அல்லகுறிப்படுதல் - தலைவன் இரவில்
வரும் வழியின்
அருமைப் பாடு முதலான சிறப்புச் செய்திகள்.
மேற்கண்ட செய்திகளை அறிவதன் மூலம் தலைமக்கள்
திறமையுடன் மேற்கொண்ட களவு வாழ்க்கையின்
அருமைப்பாட்டை உணர முடிகிறது.
|