4. |
கற்பொடு
புணர்ந்த கவ்வையின் ஐந்து வகைகளை எழுதுக.
கற்பொடு புணர்ந்த கவ்வை ஐந்து வகைப்படும்.
(1) |
செவிலி புலம்பல் |
: |
தலைவி காதலனுடன்
உடன்போக்காகச் சென்று விட்டதை அறிந்து கொண்ட செவிலித் தாய் புலம்புதல்.
|
(2) |
நற்றாய் புலம்பல் |
: |
தன் புதல்வி காதலனுடன்
உடன் போக்காகச் சென்றுவிட்டதை அறிந்து கொண்ட நற்றாய் புலம்புதல்.
|
3) |
கவர் மனை மருட்சி |
: |
நற்றாய் தன் வீட்டில்
இருந்து கொண்டு வருந்துதல். |
(4) |
கண்டோர்
இரக்கம்
|
: |
தலைவியின் தாயும் தோழியரும்
அவளது உடன்போக்கினை அறிந்து அப்பிரிவைத் தாங்க முடியாமல் வருந்திப்
பேசுதலை இரங்கிக் கூறுதல்.
|
(5) |
செவிலி பின்தேடிச்
சேறல் |
: |
உடன் போக்காகச் சென்ற
தலைவியைத் தேடிக்கொண்டு, செவிலி பின்தொடர்ந்து செல்லுதல். |
|