(1) |
பிரிவு அறிவுறுத்தல் |
: |
தலைவன் ஒரு காரணம் கருதிப் பிரிந்து
செல்ல இருப்பதைத் தோழி தலைவிக்கு உணர்த்துதல். |
(2) |
பிரிவு உடன்படாமை
|
: |
அவ்வாறு தலைவன் பிரிய இருப்பதைத்
தலைவி ஒப்புக்கொள்ளாமை. |
(3) |
பிரிவு உடன்படுத்தல் |
: |
‘சூழ்நிலை கருதித் தலைவன் பிரிந்து
செல்லுதல் தவிர்க்க முடியாதது’ என்று கூறும் தோழி, தலைவியை அப்பிரிவுக்கு
உடன்படச் செய்தல். |
(4) |
பிரிவு உடன்படுதல் |
: |
தலைவன் பிரிந்து சென்ற பிறகு அதற்காகத்
தலைவி வருந்துதல். |
(5)
|
பிரிவுழிக் கலங்கல்
|
: |
தலைவன் தனது இல்லற வாழ்க்கைக்குத்
தேவையான பொருள் ஈட்டுதல் காரணமாகப் பிரிதல்.
|
(6) |
வன்புறை |
: |
அவ்வாறு பிரிவுக்கு வருந்தும் தலைவிக்குத்
தோழி ஆறுதல் கூறுதல்.
|
(7) |
வன்பொறை |
: |
தோழியின் ஆறுதல் மொழிகளைக் கேட்ட
தலைவி, தலைவனின் பிரிவை வலிந்து பொறுத்துக் கொள்ளுதல்.
|
(8) |
வருவழிக் கலங்கல் |
: |
தலைவியைப் பிரிந்து சென்று செயலாற்றிய
தலைவன் பணிமுடிந்து மீண்டு வரும் வழியில் தலைவியின் நிலையை எண்ணி வருந்துதல்.
|
(9) |
வந்துழி மகிழ்ச்சி
|
: |
பிரிந்து சென்ற தலைவன் திரும்பி
வந்த போது தலைவியும், தோழியும் மகிழ்தல்.
|
இவையாவும்
ஓதற் பிரிவு முதலான ஐவகைப் பிரிவுகளுக்கும் உரிய பொதுவான கிளவித் தொகைகள்
ஆகும். |