தன் மதிப்பீடு : விடைகள் - I | |
4. |
இறைச்சிப் பொருளை ஒரு சான்றுடன் விவரிக்க. அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப் (குறுந்தொகை,83) விளக்கம்: இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து: இனிமை தரும் களைகளை உள்ளே கொண்டிருந்தும், வெளியே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும் பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான் என்று செவிலி கூறினாள் என்பது. உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி இன்பம் அடையும் எண்ணம் இருந்தும், புறத்தே இன்னல் தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான் தலைவன் என்பது, தோழிகூற்றின் புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும் பொருள் அமைப்பு உள்ளது. |