தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
8) | புறம், புறப்புறம், அகப்புறம் ஆகியவற்றுள் அடங்கும் திணைகள் யாவை? |
புறத்துள் அடங்கும் திணைகள் ஏழு. அவை : வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை என்பனவாம். புறப்புறத்துள் அடங்குவன மூன்று. அவை : வாகைத் திணை, பாடாண் திணை, பொதுவியல் திணை என்பனவாம். அகப்புறத்துள் அடங்குவன கைக்கிளைத் திணையும் பெருந்திணையும் ஆகிய இரண்டாம். |