1.5 தொகுப்புரை

நந்தம் தமிழ் மொழியின் இயல்பு; அது மூவகைப்படும்; இயற்றமிழில் இலக்கணம் அடங்கும்; இலக்கியங்களோடு இலக்கணம் வகுக்கப் பெற்றது; இலக்கணம் என்பதன் பொருள்; இலக்கணம் காலந்தோறும் வளர்ச்சியுற்று இந் நாளில் ஆறு வகைமையில் விரிந்து நிற்கின்றது; அகம்-புறம் என்பவற்றின் பொருள்; இவற்றுள் புறப்பொருள் தொல்காப்பியர் காலத்தில் ஏழாக வகைமையுற்று, அவர் காலத்திலேயே பன்னிரண்டு பகுதியாகவும் வளர்ச்சி கண்டது; அவ்வளர்ச்சியை ஏற்றுச் செய்யப்பட்ட வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை; புறப்பொருள் வெண்பா மாலையின் நூற்பெயர்க் காரணம்; அதன் சிறப்பு; இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர், மரபு, சமயம், காலம் ஆகியவை; போர் நிகழ்வு; உலக இயற்கை; போர்க்கான காரணங்கள்;தமிழ் மன்னரிடத்து அறப்போர் நிலவியது; மன்னர்கள் போர்க்கு முன்னரும் போர்க் களத்திலும் கடைப்பிடித்த அறநெறிகள்; அவற்றுள் ஒன்றே ‘ஆநிரை கவர்தல்’ முதலியவை விரித்துக் கூறப்பட்டன. திணை-துறைகட்கு உரிய பொருள்கள்; போர் ஒழுகலாற்றின் படிநிலைகள்; ஆசிரியர் நூலை இயற்றிய திறம்; உரையாசிரியர் பெயர், பிறப்பிடம், காலம், உரைப்போக்கு முதலியவையும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)
புறப்பொருள் வெண்பா மாலை பெயர்க்காரணம் தருக.
விடை
2)
புறப்பொருள் வெண்பா மாலை எத்தனை படலங்களை உடையது? அவை யாவை?
விடை
3)
அகம், புறம் என்பதன் பொருள் என்ன? இலக்கணக் குறிப்புத் தருக.
விடை
4)
தொல்காப்பியர் கூறும் அகத்திணை எத்தனை? புறத்திணை எத்தனை? ஏன்?
விடை
5)
போர்க்கான பொதுக் காரணங்கள் மூன்றனைக் குறிக்க.
விடை
6)
போர்க்காலத்தில் காக்கப்பட வேண்டியவர்கள் சிலரைக் குறிக்க.
விடை
7)
பாடாண்திணையாவது யாது? விளக்குக.
விடை
8)
புறம், புறப்புறம், அகப்புறம் ஆகியவற்றுள் அடங்கும் திணைகள் யாவை?
விடை
9)
புறப்பொருள் வெண்பா மாலையில் வரும் ‘கொளு’ என்பது யாது?
விடை