3.8 தொகுப்புரை

எத்தகைய போரினைப் புரிய நினைகின்றார்களோ அந்தப் போரினுக்குரிய அடையாளப் பூவைத் தனியாகவோ, தங்கள் குடிப்பூவுடன் சேர்த்தோ அணிந்து கொண்டு போரிடுவது மறவரது வழக்கம். நிரைமீட்டலாகிய கரந்தை ஒழுக்கத்தினுக்குக் கரந்தைப் பூவைச் சூடுவர்.

உடன்போக்கில் சென்றவர்களை மீட்டுவந்து திருமணம் தரும் அக வொழுக்கத்தொடு ஒப்பு நோக்கத்தக்கது இது. கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்டுவந்து இரு வேந்தரும் நாளும் இடமும் குறித்துத் தம்முள் போரிடும் புறவொழுக்கம் கரந்தை. எனவே, கரந்தையும் குறிஞ்சியின் புறன் ஆகும். (வெட்சி குறிஞ்சியின் புறன் ஆவதை முந்தைய பாடத்தில் படித்தோம்.)

கரந்தை என்பது நிரைமீட்டல், இதன் துறைகள் பதின்மூன்று. இவற்றைப் பற்றி இந்தப் பாடத்தில் படித்தோம்.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
கரந்தைப் பூவினைத் தரும் பூண்டின் பெயர் என்ன?
விடை
2.
கரந்தையை எதனது புறம் எனலாம்?
விடை
3.
கரந்தைத் துறைகள் மூன்றனைக் குறிப்பிடுக.
விடை
4.
‘கந்தைப் போரில் மறவர் இறத்தலும் உண்டு’ என்பதைச் சுட்டும் துறை யாது?
விடை
5.
‘பிள்ளையாட்டு’ - விளக்குக.
விடை
6.
நெடுமொழி கூறல் என்பது யாது?
விடை
7.
‘முன்தோன்றிய குடி’யை வெளிப்படுத்தும் துறை எது? அதன் வரிகளைத் தருக.
விடை