5.6 தொகுப்புரை

தன்மேல் போரென வருவானைத் தடுத்துக் காத்துக் கொள்வது மன்னனுக்குரிய அரசியல் பண்பு.

நிலையாமையாகிய அறத்தை எதிர் ஊன்றலாகிய மறத்தில் வைத்துக் காட்டல் பண்டைய இலக்கண ஆசிரியர்களின் கொள்கை.

வஞ்சியின் மறுதலை ஒழுக்கமாகிய எதிரூன்றல், காஞ்சியென்னும் ஒரு புறத்திணையாக வளர்ச்சியுற்றது. புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியரின் காஞ்சித் திணைக்கு அடித்தளங்களாகத் தொல்காப்பியம், பன்னிருபடலம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் தந்த செய்திகள் அமைந்தன.

காஞ்சி பெருந்திணைக்குப் புறன் ஆகும். அவ்வாறு புறன் என்பதற்கான காரணமும் காஞ்சித் திணையின் துறைகள் இருபத்தொன்றாக அமைவதும் இந்தப் பாடத்தில் விளக்கமாகக் கூறப்பெற்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
வாள் செலவு, குடை செலவுகளைக் காஞ்சி மன்னன் எதன் பின்னர் நிகழ்த்துவான்?
விடை
2.
வஞ்சினக் காஞ்சித் துறை யாரைக் குறிக்கிறது?
விடை
3.
மகளிரொடு தொடர்புண்ட காஞ்சித் துறைகளுள் இரண்டனைக் குறிப்பிடுக.
விடை
4.
பேயொடு தொடர்புடைய காஞ்சித் துறைகளுள் இரண்டைக் குறிக்க.
விடை
5.
‘முனைகடி முன்னிருப்பு’ - தரும் செய்தியைத் தருக.
விடை