6.5 தொகுப்புரை

பெருந்திணை என்பது அகத்திணைகளில் ஒன்றாக இருந்து உரையாசிரியர்களாலும் பிறராலும் தரப்பட்ட விளக்கங்களால் அகப்புறமாகவும் புறமாகவும் ஆக்கப்பட்டது. புறப்பொருள் வெண்பா மாலை இதனைப் புறத்திணையாகக் கொண்டு விரிவாக விளக்குகிறது. பெண்பால் கூற்று, இருபால் பெருந்திணை என்ற இரு பகுதிகளில் தலைவியினுடைய காதல் உணர்வின் மிகையும், தவிப்பும், ஊடலும், சினமும் காட்டப்படுகின்றன. தலைவனின் பரத்தமையும் காமவேட்கையும் புலப்படுத்தப்படுகின்றன. தலைவன், தலைவி, பரத்தை ஆகியோரின் உறவு நிலைகளும், விறலி, தோழி ஆகியோரின் தூது நிலைகளும் காட்டப்படுகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
மடல் ஊர்தல் என்பதன் கொளு யாது?
2.
பருவம் மயங்கல் என்றால் என்ன?
3.
பெண்பால் கிளவி என்பதற்கான வெண்பாவின் பொருள் யாது?
4.
குற்றிசை என்றால் என்ன?