5.3 இடைக்காலத்தில் துணைவினைகள்
இடைக்காலத்தில் மாட்டு,
ஒழி, வை, ஆக்கு, கூடு போன்ற புதிய புதிய துணைவினைகள் வழக்கில்
வரலாயின. சங்க காலத்தில் வழங்கியனவாகக் கூறப்பட்ட
துணைவினைகள் பலவும் இடைக்காலத்தில் வழங்கின. இடைக்காலத்தில்
புதிய துணைவினைகளின் ஆட்சியைக் கீழ்க்கண்ட சான்றுகளால் அறியலாம்.
சான்று :
மாட்டு
நம்மை மறந்தாரை நாமறக்க
மாட்டேமால்
(சிலம்பு, 7:32-3)
(மறக்க மாட்டேம் = மறக்க மாட்டோம்
;ஆல்
= அசை)
ஒழி
. . . .அவன்முன் அயர்ந்து
ஒழிவாய் அலை
(மணிமேகலை, 21:112)
(அயர்ந்து - மறந்து
;அயர்ந்து ஒழிவாய் =
மறந்து ஒழிவாய்).
வை
ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனன் என்
(மணிமேகலை, பதிகம்.95)
(அறிய வைத்தனன் =
அறியச் செய்தான்)
ஆக்கு
அந்தரந் திரியவும்
ஆக்குமிவ் வருந்திறன்
(மணிமேகலை, 10;80)
(திரியவும் ஆக்கும் =
திரியச் செய்யும்)
கூடு
குடங்கையின் நொண்டு கொள்ளவும்
கூடும்
(சிலம்பு, 10;83)
(குடங்கையின்
= வளைந்த கையால்
; நொண்டு
= முகந்து
கொள்ளவும் கூடும்
= உட்கொள்ளவும் தகும்).
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1.
|
துணைவினை என்றால் என்ன? |
|
2.
|
கூட்டுவினையின் அமைப்பு யாது? ஒரு சான்று தருக. |
|
3.
|
சங்க காலத்தில் வழங்கிய துணைவினைகள் யாவை? |
|
4.
|
சங்க காலத்தில் தொழிற்பெயருடன் சேர்ந்துவந்த
துணைவினைகள்
யாவை? |
|
5.
|
இடைக்காலத்தில் வழங்கிய புதிய துணைவினைகள்
யாவை? |
|
|