5.4 இன ஒலி மாற்றம்

    மொழியில் காணப்படும் ஒலி மாற்றங்கள் தாறுமாறாக நடப்பவை அல்ல. நடைபெறும் மாற்றங்களுக்கிடையே ஒரு விதமான ஒழுங்கினைக்     காணலாம். தமிழில் உள்ள வல்லெழுத்துகளில் ஒன்றில் ஒரு மாற்றம் நிகழும்போது அம் மாற்றம்     மற்ற     வல்லெழுத்துகளிலும் ஒழுங்கான முறையில் நிகழ்கிறது.

    சான்றாக, வல்லெழுத்துகளில் ஒன்றான ‘க்’ (k) என்பது குரல் இலா ஒலி (Voiceless Sound) ஆகும். இது ‘ங்’ (Œ) என்ற மெல்லெழுத்திற்குப் பின்னால் வரும்போது ‘க்’ (g) என்ற குரல் உடை ஒலியாக மாறுகிறது.

    சான்று:

    தங்கம் (tangam)

    இதுபோல், ‘ச் (c), ட் (), த் (t), ப் (p)’ ஆகிய பிற வல்லெழுத்துகள் குரல் இலா ஒலிகளாகும். இவை முறையே ‘ஞ் (), ண் (), ந் (n), ம் (m)’ என்ற மெல்லெழுத்துகளுக்குப் பின்னால் வரும்போது முறையே j, , d, b என்னும் குரல் உடை ஒலிகளாக மாறுகின்றன.

  • c j
  • t d
  • p b

    சான்று:

  • மஞ்சள் (manjal)
  • நண்டு (nau)
  • தந்தம் (tadam)
  • கம்பர் (Kambar)

    இச்சான்றுகளை நோக்கின் தமிழில் வல்லெழுத்துகள் மெல்லெழுத்துகளுக்குப் பின்னால் வரும் சூழ்நிலையில் அவை குரல் உடை ஒலிகளாக மாறும் ஒழுங்கான அமைப்புக் காணப்படுவதை அறியலாம். இத்தகு ஒலி மாற்றத்தை மொழியியலார், இன ஒலி மாற்றம் (Class Change) என்று குறிப்பிடுகின்றனர்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
ஒலி மாற்றம் ஏற்படுவதற்கான இரு காரணங்கள் யாவை?
2.
ஒலி மாற்றம் ஒரே சீராக நடைபெறுகிறதா?
3.
யாகாரத்தில் தொடங்கும் சொற்களைக் குறிப்பிடுக. அவை இடைக்காலத்தில் எவ்வாறு மாறி அமைந்தன?
4.
நிபந்தனை மாற்றம் என்றால் என்ன?
5.
இரட்டைத் தகரம் எப்பொழுது சகரமாக மாறும்? சான்று தருக.