தன் மதிப்பீடு - II : விடைகள்

4.

ஆங்கிலக் கல்வியின் பயனால் ஏற்பட்ட நன்மைகள் யாவை?

ஆங்கிலக் கல்வியின் பயனால் புதுமைப் படைப்புகளை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டதினால் தமிழ் உரைநடையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. அரசியல் விழிப்பும், விடுதலை வேட்கையும் ஏற்பட்ட பிறகு வளர்ச்சி பெருமளவில் பெருகியது. நாட்டு விடுதலை உணர்வு, சீர்திருத்த உணர்வு, மொழி உணர்வு அனைத்தும் இணைந்து உரைநடை வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தன. மேலைநாட்டில் முன்னேறிய கலை, அறிவியல் நம் நாட்டிலும் பரவத் தொடங்கியது. அதன் விளைவாகவும் உரைநடை புதுவகையில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அக்காலத்தில் செய்யுள் பெற்றிருந்த இடத்தை இக்காலத்தில் உரைநடை பெற்றுள்ளது

முன்