1.6 தொகுப்புரை | |||||||||||||||||||
தமிழ் நாடக வளர்ச்சி நிலைகளை இதன் பின்னர் பல பாடங்களில் அறிய இருக்கின்றோம். எனவே இந்த அளவில் நிறுத்திக்கொண்டு முடிவுரையாகச் சில செய்திகளை அறிவோம். விளையாட்டு உணர்ச்சியும், போலச்செய்தல் உணர்ச்சியும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. எனவே, ஒரே கால கட்டத்தில் நாடக உணர்ச்சி அனைத்து நாடுகளிலும் உருவாகி இருக்க வேண்டும். சமயச் சடங்கிலிருந்தும், மகிழ்வு உணர்ச்சியிலிருந்தும் நாடகம் உருவாகி இருக்க வேண்டும். பொதுவாகப் பல நாடுகளில் நாடகம் தெய்வத் தொடர்புடையதாகவே இருக்கிறது.
இசைப்பாட்டும், நடனமும்
நாடகத் தோற்றத்திற்கு
முன்னோடிகளாக இருந்திருக்கலாம். |
|||||||||||||||||||
|