1.5 தொகுப்புரை

நண்பர்களே ! தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்றான சிற்றிலக்கியம் என்பது பற்றி இதுவரையிலும் பார்த்தோம். இதுவரை பார்த்ததிலிருந்து நீங்கள் அறிந்து கொண்டவை யாவை என்பதை மீண்டும் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

சிற்றிலக்கியம் என்றால் என்ன என்பதை விளக்கமாக அறிந்திருப்பீர்கள்.
சிற்றிலக்கியம் என்ற சொல் தோன்றிய வரலாறு தெளிவாகப் புரிந்திருக்கும்.
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை பற்றி விளங்கி இருக்கும்.
சிற்றிலக்கியங்களை எவ்வாறெல்லாம் வகைப்படுத்தலாம் என்று அறிந்திருப்பீர்கள்.
சிற்றிலக்கியத்தின் சிறப்புகளை   உணர்ந்திருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

தத்துவக் கருத்தை உணர்த்தும் சிற்றிலக்கியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

விடை
2.

உடல் உறுப்புகளைப் புகழும் நோக்கில் இயற்றப் பெற்ற சிற்றிலக்கிய வகைகள் இரண்டினைக் குறிப்பிடுக.

விடை
3.

இசைநாடகச் சிற்றிலக்கிய வகைகளுக்கு இரண்டு சான்றுகள் தருக.

விடை
4.

பள்ளி எழுச்சி என்ற இலக்கிய வகை எந்தத்துறையிலிருந்து தோன்றியது?

விடை
5.

ஒரே பொருண்மையில் பாடப்பட்ட வெவ்வேறு இலக்கிய வகைகள் யாவை?

விடை
6.

குறிப்பிட்ட பாடல் எண்ணிக்கையில் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுந்த இரு சிற்றிலக்கிய வகைகளைக் கூறுக.

விடை
7.

சிற்றிலக்கியத்தின் சிறப்புகளில் இரண்டினைக் கூறுக.

விடை