மடந்தைப்
பருவப் பெண்ணொருத்தி தன் தோழியுடன் பந்து விளையாடும் அழகைக் கற்பனை நயத்துடன்
பாடுகிறார் ஒட்டக்கூத்தர். பந்துவிளையாடுவதால் அவள் கை சிவக்கும் என்று கூறுவது
போல் அவள் வளைகள் ஒலித்தன. இடை வருந்தும் என்று கூறுவதுபோல் அவள் இடையில் அணிந்திருந்த
மேகலை ஒலித்தது. சிற்றடி வருந்தும் என்று கூறுவதுபோல் காலில் அணிந்திருந்த
சிலம்பு ஒலித்தது. இவ்வாறு பாடுகிறார் ஒட்டக்கூத்தர்.
|