கூத்தப்பெருமானையே
குலதெய்வமாகக் கொண்டவன் இவன். வருவாயில் பெரும்பகுதியைத் தில்லைக்கோயில் திருப்பணிச்
செலவிற்கே தந்தனன் எனத் திருமழபாடிக் கல்வெட்டுக் கூறுகின்றது. பூமகள் புணர
பூமாது மிடைந்து என்று தொடங்கும் கல்வெட்டு மெய்க்கீர்த்திகள் இச்செய்தியை
நன்கு விளக்குகின்றன. கூத்தப்பெருமான் திருக்கோயில் வெளிச்சுற்று முழுவதும்
விக்கிரம சோழன் திருமாளிகை என்றும் திருவீதிகளுள் ஒன்று விக்கிரமசோழன் தென்திருவீதி
என்றும் இம்மன்னன் பெயரால் வழங்கப்படுகின்றன. தில்லைக் கூத்தப் பெருமான் திருக்கோயிற்பணியில்
இவன் உள்ளம் பெரிதும் ஈடுபட்டிருந்தது என்பதை இதனால் உணரமுடிகின்றது.
|