இயற்கையை
உடலாகக் கொண்டவன் சிவன். ஒரு நாளின் பொழுதுகளையே உவமையாக்கி, சிவபெருமானை வர்ணிக்கும்
அழகைப் பாருங்கள்.காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கிருளே போலும் மிடறு - (65)
வேளைக்கு வேளை இயற்கை அடையும் நிறங்கள் சிவபெருமான்
திருமேனியில் திகழ்தலைச் சுட்டிக் காட்டுகிறார். |