தன் மதிப்பீடு : விடைகள் - II

6. புறத்திணைகளில் சமூகச் செய்திகளை விளக்குக.

புறத்திணைகள் போர்ப் பிரிவுகளை விளக்குகின்றன. ஆநிரை கவர்தல் தொடங்கி, பாடாண் திணை வரை ஓர் ஒழுங்கு காணப்படுகிறது.

போர் தொடங்கும் போது, பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வந்து பாதுகாப்பர். பசுக்கூட்டங்களைக் கவர்வதே போருக்கு அடிப்படையாக அமைகிறது.

போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றான காஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக் கூறுகின்றது.

சங்கப் புற இலக்கியங்கள் புறத்திணைகளையும் அவற்றின் துறைகளையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன.

முன்