3.6 தொகுப்புரை

இப்பாடம் புறத்திணைப் பாகுபாட்டில் தொல்காப்பியர் கூறியதிணைகளையும், துறைகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், பிற்காலப் புறப்பொருள் வெண்பாமாலையின் திணை துறைகளையும் நாம் மேம்போக்காக இப்பாடத்தில் அறிந்து கொண்டோம்.

கைக்கிளை, பெருந்திணை ஆகியவை அகத்திணைகளாக இருந்தாலும் அன்பின் ஐந்திணை என்னும் வரையறைக்குள் அடங்காததால் பிற்காலத்தில் புறத்திணையில் இணைக்கப்பட்டன.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
புறத்திணைகளின் எண்ணிக்கை குறித்து விளக்குக.
(விடை)
2.
வெட்சியும் கரந்தையும் குறித்து விளக்குக. (விடை)
3.
உழிஞைத் திணையின் துறைகள் குறித்து எழுதுக. (விடை)
4.
நொச்சித் திணை என்றால் என்ன? (விடை)
5.
தும்பைத் திணை பற்றிக் கூறுக. (விடை)
6.
புறத்திணைகளில் சமூகச் செய்திகளை விளக்குக. (விடை)