5.5 தொகுப்புரை

இதுவரை இப்பாடத்திலிருந்து நீங்கள் என்னென்ன தெரிந்து கொண்டீர்கள் என்பதை ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூறு பற்றித் தெரிந்து கொண்டீர்கள்.

  • அன்றைய தமிழரின் சமூக வாழ்க்கை பற்றிய பல செய்திகளை அறிந்துகொண்டீர்கள்.

  • அரசியல், கல்வி, அறம், அறிவியல் போன்ற துறைகளில் சங்க கால மக்கள்தம் நிலை பற்றிப் புரிந்து கொண்டீர்கள்.

  • அவர்களின் அன்பு, நட்பு, வீரம், மானம், ஈகை முதலிய பண்புகளை உணர்ச்சி நலம் பொருந்திய பாடல்கள் மூலம் உணர்ந்து கொண்டீர்கள்.

  • உவமை, உருவகம், உணர்ச்சி, வெளிப்பாடு இவற்றில் புறநானூற்றுப் பாடல்கள் சிறந்து உயர்ந்த இலக்கியத் தரத்துடன் விளங்குவதைப் புரிந்து கொண்டீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் கிள்ளிவளவன் என்ன சிறப்புப் பெயரால் குறிப்பிடுகிறான்?
(விடை)
2.
பகைவர் மீது சினம் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு அழிவு செய்யும் அதியமானின் அமைதியான பண்புக்கு ஒளவையார் காட்டும் உவமை எது? (விடை)
3.
நிலம் நலம் பெற எவர் நல்லவர்களாக இருக்க வேண்டும்? (விடை)
4.
தன்னலம் நிறைந்தோர்க்கு நக்கீரர் தரும் எச்சரிக்கை யாது? (விடை)