6.8 தொகுப்புரை | ||||||||||||||||||||||||||||||||||
நண்பர்களே! இப்பாடத்தில் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரு திணைகள் பற்றி அறிந்தீருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள். கைக்கிளையின் விளக்கம், தொல்காப்பியர் கூறும் கைக்கிளை இலக்கணம், கைக்கிளை பாடிய புலவர்கள், கைக்கிளையைக் காட்டும் அக இலக்கியங்கள், கைக்கிளையை உணர்த்தும் புற இலக்கியம் (புறநானூறு), பிற இலக்கியங்களில் இடம்பெறும் கைக்கிளை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிந்தது. பெருந்திணையின் விளக்கம், தொல்காப்பியர் கூறும் பெருந்திணை மரபு, பெருந்திணை பாடிய புலவர்கள், பெருந்திணையைக் காட்டும் கலித்தொகை, பெருந்திணையை உணர்த்தும் புறநானூறு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிந்தது. இதுவரை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலைத் திணைகளின் முப்பொருள்கள், முப்பொருள் வெளிப்பாடு, சிறப்புகள், இலக்கிய நயங்கள் பற்றி அறிந்தீர்கள். இப்போது கைக்கிளை, பெருந்திணை பற்றி அறிந்தீர்கள். இவ்வாறு சங்க அக இலக்கியங்கள் பற்றித் தெளிவாக (ஆறு பாடங்களில்) அறிந்திருப்பீர்கள். |
||||||||||||||||||||||||||||||||||
|