3.5 தொகுப்புரை

பிற துறை மொழிபெயர்ப்பில், குறிப்பாக அறிவியல் மொழிபெயர்ப்பில் இதழ்கள் காட்டிய ஆர்வம், மொழிபெயர்ப்புகள், தமிழில் தனியாக அறிவியல் நூல்களைப் பாடநூலாகவும் பொது நூல்களாகவும், பார்வை நூல்களாகவும் மொழிபெயர்க்கப்பட்ட தன்மை, மொழிபெயர்ப்புப் பணியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேறு நிறுவனங்களின் பங்களிப்பு, ஆட்சித்துறை, சட்டத்துறை ஆகியவற்றில் மொழிபெயர்ப்பின் நிலை முதலியன குறித்து இந்தப்பாடம் உங்களுக்குத் தொகுத்துக்கூற முயற்சி செய்துள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. பிற துறை மொழிபெயர்ப்பில் பல்கலைக்கழகங்களின் நிலை என்ன? விடை
2. பிற துறை சார்ந்த மொழிபெயர்ப்பில் நிறுவனங்கள் என்னென்ன செய்துள்ளன? விடை
3. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் மொழிபெயர்ப்பின் இடம் என்ன? விடை
4. சட்டத்துறை மொழிபெயர்ப்புக் குறித்துக் குறிப்பிடுக. விடை