தன் மதிப்பீடு : விடைகள் - II

 

5) சொல்லாக்கத்தின் விளைவுகள் யாவை?

சொல்லாக்கம் காரணமாகத் தமிழ்மொழியின் ஒலியமைப்பிலும் சொல்லமைப்பிலும் பொருள் புலப்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சொல்லாக்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சொற்கள், மரபு வழிப்பட்ட தமிழ் இலக்கணத்தில் மாற்றங்களைக் கோருகின்றன.

மொழியியலின் பிற பிரிவுகளைக் காட்டிலும் இலக்கணத்துடன் நெருங்கிய தொடர்புடையது சொல்லாக்கம். சொல்லாக்கம் மரபிலக்கணத்துடன் வேறுபடும் இடங்களைக் கண்டறிந்து புதிய இலக்கண விதிகளை வகுக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இது மொழியியல் அடிப்படையில் சொல்லாக்கம் ஏற்படுத்தியுள்ள முக்கிய விளைவு ஆகும்.

முன்