1.8 தொகுப்புரை

மாணவ நண்பர்களே! இதுவரை சொல்லாக்கம் - பொது அறிமுகம் என்ற தலைப்பின் கீழ், சில செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.

இந்தப் பாடத்தினைப் படித்ததன் மூலம் நீங்கள் அறிந்துகொண்ட முக்கியமான செய்திகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மொழிபெயர்ப்பில் சொல்லாக்கம் பற்றிய பொதுவான தகவல்கள் அறிமுக நிலையில் உங்களுக்குள் பதிவாகியிருப்பதனை உணர்வீர்கள்.

சொல் பற்றிய விளக்கம், சொல்லாக்கத்தின் தன்மைகள், தமிழில் சொல்லாக்கம் அறிமுகமான கால கட்டம், சொல்லாக்கத்தின் தேவைகள், விளைவுகள்... போன்றன பற்றி விரிவான நிலையில் இப்பாடத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
தமிழில் சொல்லாக்கச் சிந்தனைகள் குறித்து விவரிக்க.
2.

‘கடிசொல் இல்லை காலத்துப் படினே’ என்று கூறியவர் யார்?
3.

பூமி சாஸ்திரம் என்ற நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
4.
துறைச் சொற்களின் இயல்புகள் யாவை?
5.
சொல்லாக்கத்தின் விளைவுகள் யாவை?
6.
சொல்லாக்க முறைமைகளை விளக்குக.