தன் மதிப்பீடு : விடைகள் - II

5) பெயர்களிலிருந்து பெயரடையாக்கம் பற்றி விளக்குக.

பெயரடைகளைத் தமிழில் ஒரு சொல் வகையாக ஏற்றுக் கொள்வதில் மொழியியலாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் தற்காலத் தமிழுக்குப் பெயரடை மறுக்க இயலாத சொல் வகையாகும்.

ஆன, உள்ள என்ற பேரொட்டுகள் பெயர்களுடன் சேர்ந்து பெயரடையாக்கம் செய்கின்றன.

எடுத்துக்காட்டு:

அழகு + ஆன > அழகான
சத்து + உள்ள > சத்துள்ள
முத்து + ஆன = முத்தான

எடுத்துக்காட்டு:

ஒன்று + ஆம் = ஒன்றாம்
மூன்று + ஆவது = மூன்றாவது
நூறு + ஆவது = நூறாவது

ஆம், ஆவது என்ற பேரொட்டுகள் எண்ணுப் பெயர்களுடன் சேர்ந்து பெயரடையாக்கம் செய்கின்றன.

முன்