தன் மதிப்பீடு : விடைகள் - I

4)

சொல்லாக்க முயற்சியில் அறிவியல் வளர்ச்சியின் இடத்தினை ஆராய்க.

அறிவியலாளர்களைப் பொறுத்த வரையில் கருத்தினை வெளிப்படுத்துவதற்குரிய கருவியான மொழியானது இரண்டாம் நிலையினதாகக் கருதப்படுகிறது. மூல மொழியில் உள்ள அறிவியல் கலைச் சொற்களை, அப்படியே ஒலிபெயர்ப்பாகத் தமிழாக்கிக் கொள்வதே பொருத்தமானது என்று சிலர் வாதிடுகின்றனர். மேலும் இன்று அறிவியல் ரீதியில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான வளர்ச்சியினைத் தமிழில் கொண்டு வருவதற்கு, சொல்லாக்கம் தடையாக உள்ளது. உலக அளவில் ஏற்படும் மாற்றங்களைத் தமிழில் கொண்டுவர வேண்டுமெனில், அறிவியல் மூலச் சொற்களை அப்படியே தமிழாக்குவது உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.

மேற்குறிப்பிட்ட வாதங்களில் ஏற்புடைய உண்மை உள்ளது. எனவே அவற்றை முழுக்கப் புறக்கணிக்கவோ அல்லது அப்படியே ஏற்றிடவோ இயலாது. எனினும் தமிழில் தொடர்ந்து அறிவியல் ஆவணங்கள் வெளியாகும்போது, சொல்லாக்க முயற்சிகளின் விளைவாக, நாளடைவில் அறிவியல் தமிழ் வளம் பெறும்.

முன்