3.7 தொகுப்புரை தேவாரத் திருவாசகங்கள் என்ற இப்பாடத்தில் தேவாரம் மற்றும் திருவாசகங்களின் தொகுப்பு முறை, பதிக எண்ணிக்கை, பாடல் தொகை, பாடப் பெற்ற தலங்கள், அமைந்துள்ள பண் அடைவுகள், தேவாரம் பாடிய மூவரின் வரலாற்றுச் சுருக்கம், அவர் தம் பெருமைகள், பாடல் சிறப்பு, வாழ்ந்த காலம் முதலியன முறையாக விளக்கம் செய்யப் பெற்றுள்ளன. அரிய தேவாரத் திருவாசகத் தொடர்களும், பெரிதும் போற்றப்படும் அருள் பாடல்களில் சிலவும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. |
|