சைவ சமய இலக்கிய வகைகளுள் ஒன்றாகிய தலபுராணங்கள்
பற்றியும் அவற்றுள் பெரும்பாலானவை சிவனைப் பற்றியே
எழுதப்பட்டன என்பதனைப் பற்றியும் இப்பாடம் சொல்கிறது.
அந்தந்தத் தலப் பெருமையும் சுட்டிக் காட்டப்படுகிறது.
சைவ புராணங்களில் சிறப்பு வாய்ந்தவையாகப்
போற்றப்படும் திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், கோயில் புராணம்,
காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம் முதலியவற்றின் சிறப்பு இப்பாடத்தில்
விரித்துரைக்கப்படுகிறது.
மேலும் மாயூரப் புராணம், சீகாழித் தலபுராணம்
போன்ற தலபுராணங்களும் சுருக்கமாகப் பேசப்படுகின்றன.
|