E
P20222 - திவ்வியப்பிரபந்தம் - ஓர் அறிமுகம்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
  • ஆழ்வார்கள்     அருளிச்     செய்த     பாடல்கள்
    திவ்வியப்பிரபந்தம் என்ற பெயரால் அழைக்கப்பட்டன.

  • பன்னிரு ஆழ்வார்களும் இப்பாடத்தில் அறிமுகப்படுத்தப்
    படுகிறார்கள்.

  • வைணவ பாசுரங்கள் அனைத்தும் 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன என்பதும் அவை
    நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என்ற பெயரால்
    வழங்கப்பட்டன என்பதும் குறிக்கப்படுகின்றன.

  • இப்பாடத்தில் மணிப்பிரவாள நடையில் வைணவர்கள்
    எழுதிய உரைகள் தமிழுக்கு வளம் சேர்த்ததும்
    குறிப்பிடப்படுகிறது.


இந்தப்பாடத்தைப் படிப்பதால்என்ன பயன் பெறலாம்?
  • திவ்வியப் பிரபந்தத்தின் விவரங்களைத் தொகுத்துக் கொள்ளலாம்.

  • திவ்வியப் பிரபந்தத்தினை நாலாயிரம் ஆகக்
    கணக்கிடுவதில் அறிஞர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டையும் வைப்பு முறையையும் அடையாளம் காணலாம்.

  • திவ்வியப் பிரபந்த உரையாசிரியர், ஆழ்வார்கள்
    அருளிய திவ்ய தேசங்கள், மாதிரிக்காக வைணவம் தொடர்பான சில சொற்கள் உணர்த்தும் பொருள்
    என்பன போன்ற சில செய்திகளைப் பட்டியலிடலாம்.

பாட அமைப்பு