1.6 தொகுப்புரை

தொடக்க காலத்தில் இலக்கியங்கள் செய்யுள் வடிவில் படைக்கப் பட்டமையையும், பின்னர், தாள், அச்சு இயந்திரக் கண்டுபிடிப்புகளால் உரைநடை வளர்ச்சி பெற்று, அதனால், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் ஆகியவை படைப்பிலக்கிய வகைகளாகப் படைக்கப் பட்டமையும் பற்றிக் கற்றோம். மேலும், படைப்பிலக்கியம் தோன்றுவதற்குரிய காரணங்கள், பயன்கள், படைப்பாளனின் தகுதிகள் ஆகியவற்றையும் இப்பாடத்தின் மூலம் கற்றுக் கொண்டோம்.



தன் மதிப்பீடு : வினாக்கள் II

1.
படைப்பிலக்கியம் - வரையறுக்க.
2.
படைப்பிலக்கிய வகைகளைக் கூறுக.
3.
படைப்பிலக்கியம் தோன்றக் காரணம் என்ன?
4.
படைப்பாளியின் தகுதிகள் யாவை?