உலகில் நாவல் இலக்கியம் தோன்றிய காலம் முதல்
நாவலின் பரிணாம வளர்ச்சியை நாம் இப்பாடத்தில்
பார்த்தோம். தமிழில் நாவல் இலக்கியம் தோன்றியதும், ஆங்கிலக்
கல்வி
கற்றமையும், பரவலாக்கப்பட்ட கல்வியும், அச்சக வளர்ச்சியும்
நாவல் வளர்ச்சிக்குத்
துணை நின்றமையை அறிந்தோம். பிரதாப முதலியார் சரித்திரம் முதலாகக்
கமலாம்பாள்
சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்களின்
தோற்றமே தமிழில்
நாவல்துறையின் வளர்ச்சியை உருவாக்கின
என்பது கண்கூடு.
இருபதாம் நூற்றாண்டு, தமிழ் நாவலின் பொற்காலம்
என்பதும், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு புதிய முறை
நாவல்களின் தோற்றக் காலம் என்பதும் நாம் இப்பாடம்
வாயிலாக அறிந்து கொண்டவை. |